உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பஸ் மோதி தொழிலாளி பலி

பஸ் மோதி தொழிலாளி பலி

விழுப்புரம், : பைக்கில் சென்ற தொழிலாளி பஸ் மோதி இறந்தார்.விழுப்புரம் அடுத்த காணைக்குப்பத்தை சேர்ந்தவர் சரவணன், 51; மண்பாண்ட தொழிலாளி. இவர், நேற்று காலை வீட்டிலிருந்து பைக்கில் காணை நோக்கிச் சென்றார்.காணை கால்நடை மருத்துவமனை அருகே சென்றபோது, எதிரே விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலுார் நோக்கி வந்த தனியார் பஸ் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே சரவணன் இறந்தார்.இந்த விபத்தின் போது, பஸ் திடீரென பிரேக் போட்டு நிறுத்தப்பட்டதால் பஸ்சின் பின்னால் பைக்கில் வந்த ஆயந்துாரைச் சேர்ந்த ஜார்ஜ் ஸ்டீபன்ராஜ், 50; அவரது மனைவி மார்கரேட், 45; ஆகியோர் பஸ்சில் மோதி கீழே விழுந்து காயமடைந்தனர்.அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி 9:30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.அவர்களிடம் காணை போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை ஏற்று கலைந்து சென்றனர். காணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி