உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சப் டிரஷரியில் பெயர்ந்த டைல்ஸ்கள் இடறி விழும் ஓய்வூதியர்கள்

சப் டிரஷரியில் பெயர்ந்த டைல்ஸ்கள் இடறி விழும் ஓய்வூதியர்கள்

காரியாபட்டி : காரியாபட்டி சப் டிரஷரியில் தரை தளம் பெயர்ந்து டைல்ஸ்கள் உடைந்து பல மாதங்களாக பராமரிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் ஓய்வூதியதாரர்கள் இடறி விழுந்து வருகின்றனர். காரியாபட்டியில் நீண்ட நாள் கோரிக்கையான சப் டிரஷரி 7 ஆண்டுகளுக்கு முன் ரூ. 66 .55 லட்சத்தில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இந்நிலையில் கட்டடம் தரமில்லாமல் கட்டப்பட்டதால் தரைதளம் பெயர்ந்து டைல்ஸ்கள் உடைந்து கிடக்கின்றன. பல மாதங்களாக பராமரிக்காமல் கிடப்பில் போட்டனர். ஓய்வூதியதாரர்கள் தட்டு தடுமாறி சார் கருவூல அலுவலகத்திற்கு வருகின்றனர். உடைந்து கிடக்கும் டைல்ஸ் கற்களால் இடறி கீழே விழுகின்றனர். அங்கு பணியாற்றக்கூடிய அலுவலர்கள் பயந்து நடக்க வேண்டி இருக்கிறது. மாவட்ட நிர்வாகம் பழுதான சப் டிரஷரியின் தரை தளத்தை செப்பனிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ