உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்த 16 மாடுகள் பறிமுதல்

போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்த 16 மாடுகள் பறிமுதல்

சிவகாசி : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசியில் போக்குவரத்திற்கு இடையூராக ரோட்டில் திரிந்த மாடுகளைப் பிடித்து உரிமையாளர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனார். சிவகாசி மாநகாரட்சி பகுதியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில் வேலை பார்ப்பதை தவிர பெரும்பாலானோர் பசு மாடுகள் வளர்க்கின்றனர். மாடுகளை வளர்ப்பவர்கள் பால் கறக்கும் நேரத்தில் மட்டுமே பிடித்துச் சென்று, மீண்டும் நகர் பகுதியில் விட்டுச் சென்று விடுகின்றனர். மாடுகளும் தங்கள் உணவிற்காக தெருக்கள், குடியிருப்புப் பகுதிகள், ரோட்டிலேயே நடமாடுகின்றன. நகர் முழுவதும் குறைந்தபட்சம் நுாற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் ஸ்ரீவில்லிபுத்துார் ரோடு சேர்மன் சண்முக நாடார் ரோடு, வேலாயுத ரஸ்தா ரோடு, ஞான கிரி ரோடு, முண்டகன் தெரு, விஸ்வநத்தம் ரோடு, பைபாஸ் ரோடு, திருத்தங்கல் மெயின் பஜார், கருப்பசாமி கோயில், மாரியம்மன் கோயில், விருதுநகர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டிலேயே நடமாடுகின்றன. ஒரு சில மாடுகள் ரோட்டிலேயே அமர்ந்து வாகனத்திற்கு வழி விடுவதே இல்லை. இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர் நல அலுவலர் சரோஜா தலைமையில் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டது. இக்குழுவினர் போக்குவரத்திற்கு இடையூறாக திரிந்த 16 மாடுகளை பிடித்தனர். இரண்டு மாடுகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மீதம் உள்ள மாடுகள் மாநகராட்சி பழைய அலுவலக வளாகத்தில் அடைக்கப்பட்டது. கமிஷனர் கூறுகையில், போக்குவரத்திற்கு இடையூறாக ரோட்டில் திரியும் மாடுகள் தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்களால் பிடிக்கப்படும். முதல் முறை ரூ.5000, இரண்டாம் முறை ரூ. பத்தாயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் தொடர்ச்சியாக இச் செயலில் ஈடுபட்டால் மாடுகள் பிடிக்கப்பட்டு கோசலைகளில் ஒப்படைக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ