| ADDED : ஜூன் 13, 2024 05:18 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா திருமலாபுரத்தை சேர்ந்தவர் கனகு, 43, கொத்தனார். இவர் நேற்று முன் தினம் இரவு 10:20 மணிக்கு அழகாபுரி ரோட்டில் நத்தம் பட்டி விலக்கு அருகே இயற்கை உபாதையை கழித்துக் கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் வந்த இருவர் தாங்களும் சிறுநீர் கழிப்பது போல் டூவீலரில் நிறுத்தி, கனகுவிடம் இருந்த அலைபேசியை வழிப்பறி செய்து தப்பினர்.நத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் கனகு தகவல் சொல்லிவிட்டு இருவரையும் விரட்டி சென்றுள்ளார். இதில் அழகாபுரி போலீஸ் செக் போஸ்ட் அருகே விருதுநகர் ரோட்டில் திரும்பும்போது,, வழிப்பறி செய்து இருவரும் சறுக்கி விழுந்துள்ளனர்.அப்போது செக் போஸ்டில் இருந்த போலீசாரும், அலைபேசியை பறி கொடுத்த கனகுவும் இருவரையும் மடக்கி பிடித்து நத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.போலீஸ் விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது, விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த மணிகண்டன், 23, என்பவரும், மதுரை சக்கி மங்கலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் சூர்யா,19, என்பதும் தெரியவந்தது.இதனையடுத்து இருவரையும் கைது செய்து, டூவீலரையும் நத்தம்பட்டி போலீசார் பறிமுதல் செய்தனர்.