உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டூவீலர் உரிமையாளருக்கு ரூ.63 ஆயிரம் இழப்பீடு

டூவீலர் உரிமையாளருக்கு ரூ.63 ஆயிரம் இழப்பீடு

வில்லிபுத்தூர்: தூத்துக்குடியில் டூவீலர் காணாமல் போனதால் பாதிக்கப்பட்டஉரிமையாளர் பழனிச்சாமிக்கு ரூ.63 ஆயிரம் இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி. காப்பீடு செய்யப்பட்ட இவரது டூவீலர் 2012 ஜூலை 14ல் காணாமல் போனது. இது குறித்து தூத்துக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் டூ வீலர் காப்பீடு செய்யப்பட்டதால் அதற்குரிய பணத்தை தரக்கோரி தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பழனிச்சாமி வழக்கு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு நீதிபதி சக்கரவர்த்தி, உறுப்பினர் முத்துலட்சுமி குழுவினர் விசாரித்தனர் இதில் காப்பீட்டுத் தொகை ரூ. 33 ஆயிரம், மன உளைச்சலுக்கு ரூ. 20 ஆயிரம், வழக்கு செலவு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ. 63 ஆயிரம் வழங்க தூத்துக்குடி ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி வழங்க ஆணைய தலைவர் சக்கரவர்த்தி உத்திரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை