உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முன்னாள் சிறந்த மாணவர்களை கவுரவிக்கும் விழா

முன்னாள் சிறந்த மாணவர்களை கவுரவிக்கும் விழா

சிவகாசி: சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் முன்னாள் சிறந்த மாணவர்களை கவுரவிக்கும் விழா நடந்தது. முன்னாள் மாணவர் சங்கம் செயற்குழு உறுப்பினர் யோகேஸ்வரன் வரவேற்றார். சங்கத்தின் கடந்த கூட்டத்தில் நிகழ்வுகள் பற்றிய அறிக்கையை மது பிரசாத் வழங்கினார். சங்க செயலாளர் வேலுச்சாமி ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் பரமேஸ்வரன் ஆண்டு கணக்கு அறிக்கை வழங்கினார் கல்லுாரி ஆட்சி குழு தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். முதல்வர் அசோக், முன்னாள் மாணவர்களான சென்னை சன் கிளோ பார்மா நிர்வாக இயக்குனர் ராஜசேகரன் மும்பை ஆசியன் பெயிண்ட்ஸ் தலைமை நிதி அதிகாரி ஜெய முருகன், புதுடில்லி மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பொது இயக்குனர் வெள்ளை பாண்டி, அமெரிக்கா வாசிங்டன் பல்கலை மருத்துவத்துறை பேராசிரியர் ஜோதிலிங்கம் ஆகியோரை வாழ்த்தினர். முன்னாள் மாணவர்கள் சார்பில் கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. முன்னாள் மாணவர் சங்கம் செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்கம் செயற்குழு உறுப்பினர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை