உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நான்கு வழிச்சாலையில் கிழிந்து தொங்கும் பேனர் வாகன ஓட்டிகள் அச்சம்

நான்கு வழிச்சாலையில் கிழிந்து தொங்கும் பேனர் வாகன ஓட்டிகள் அச்சம்

விருதுநகர்: விருதுநகர் சாத்துார் அருகே எட்டூர்வட்டம் டோல்கேட் நான்குவழிசாலை அருகே உயர் கம்பத்தில் உள்ள விளம்பர பேனர் கிழிந்து தொங்குகிறது. இது எப்போது வேண்டுமானாலும் வாகனங்கள் மீது விழும் என்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.விருதுநகர் மாவட்டம் வழியாக செல்லும் நான்கு வழிச்சாலை அருகே உயர் கம்பங்களில் பல நிறுவனங்களின் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.இதே போல எட்டூர்வட்டம் டோல்கேட் அருகே வைக்கப்பட்ட உயர் கம்பத்தில் விளம்பர பேனர் உள்ளது. இந்த பேனர் அமைத்து பல மாதங்களாகிறது.மேலும் வெயில், மழையில் சேதமாகி தற்போது கிழிந்து தொங்குகிறது. ஆடி மாத காற்று பலமாக வீசுவதால் எப்போது வேண்டுமானாலும் கழன்று விழும் நிலையில் பேனர் உள்ளது. இதை வைத்த நிறுவனமும் கண்டு கொள்ளவில்லை.இந்த பேனர் விழும் போது ரோட்டில் செல்லும் கார், லாரி, பஸ் முன்பக்க கண்ணாடி மீது விழுந்தால் வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. மேலும் டூவீலரில் செல்பவர்கள் மீது விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்படும் சூழல் நீடிக்கிறது.இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.எனவே நான்கு வழிச்சாலை அருகே உயர் கம்பங்களில் வைத்துள்ள விளம்பர பேனர்களில் சேதமானவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தாமாக முன்வந்து அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை