உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தீ பிடித்து எரிந்த பழமையான புளிய மரம்

தீ பிடித்து எரிந்த பழமையான புளிய மரம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே ஆமணக்குநத்தத்தில் பழமையான புளியமரம் தீயில் கருகியது.இங்குள்ள அய்யனார் கோயில் அருகில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரிய புளியமரம் அகலமாகவும், 25 அடி உயரமும் உள்ளது. நேற்று முன்தினம் மரத்திற்கு அருகில் காய்ந்த இலை சருகு குப்பைகளில் யாரோ தீ வைத்துள்ளனர். ஆடி காற்றிற்கு தீ வேகமாக பரவி மரத்தில் பிடித்தது. ஊர் மக்கள் பார்த்து தீயை அனணத்துள்ளனர்.மரத்திற்குள் பிடித்த தீ மீண்டும் எரிந்தது. நேற்று அதிகாலை மளமளவென்று மரம் முழுவதும் பிடித்தது. தகவல் அறிந்த திருச்சுழி தீயணைப்பு நிலைய அலுவலர் முனீஸ்வரன் தலைமையில் வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் மரத்தின் பெரும்பகுதி தீயில் எரிந்து கருகியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை