உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பா.ஜ.,வினர் டூவீலர் ஊர்வலம்

பா.ஜ.,வினர் டூவீலர் ஊர்வலம்

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் பா.ஜ., வேட்பாளர் ராதிகாவின் ரோடு ஷோ, கட்சியினரின் டூவீலர் ஊர்வலம் நடந்தது.கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமை வகித்தார். நகர்ப்பகுதிகளில் வலம் வந்து மெட்டுக்குண்டு, கடம்பன்குளம், நமசிவயபுரம், புதுப்பட்டி, காளபெருமாள்பட்டி, மன்னார்கோட்டை, நல்லான்செட்டிபட்டி ஆகிய பகுதிகளில் வலம் வந்தனர்.மாலையில் விருதுநகரில் நடந்த டூவீலர் ஊர்வலம் ரயில்வே காலனியில் துவங்கி ராமமூர்த்தி பால சர்வீஸ் ரோடு, கம்பர் தெரு, மணி நகரம், முத்துராமன்பட்டி, கட்டையாபுரம், பர்மா காலனி, மீனாம்பிகை பங்களா, ஏ.டி.பி., காம்பவுன்ட், கிழக்கு பாண்டியன் காலனி, மதுரை ரோடு, வி.வி.ஆர்., சிலை அருகில், எம்.ஜி.ஆர்., சிலை பகுதியில் நிறைவடைந்தது. இதில் பா.ஜ., வேட்பாளர் ராதிகா ஓட்டு சேகரித்தார். பா.ஜ.,வினர் லோக்சபாவின் திருமங்கலம், திருப்பரங்குன்றம், சிவகாசி தொகுதிகளிலும் ஊர்வலம் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை