உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கால்வாய் உடைப்பு: வெளியேறும் தண்ணீர்

கால்வாய் உடைப்பு: வெளியேறும் தண்ணீர்

திருச்சுழி: திருச்சுழி கண்மாய்க்கு தண்ணீர் வரும் மழை நீர் வரத்து கால்வாய் உடைந்து போனதால் தண்ணீர் வீணாக வெளியேறுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.குண்டாறு, கல்குறிச்சி, பந்தநேந்தல் தடுப்பணையிலிருந்து பிள்ளையார் தொட்டியாங்குளம் வழியாக உள்ள கால்வாயிலிருந்து திருச்சுழி கண்மாய்க்கு தண்ணீர் செல்லும். கடந்த ஆண்டு தொடர் கனமழை காரணமாக திருச்சுழி குண்டாற்றில் வெள்ளம் பெருகியது. இதில் திருச்சுழி கண்மாய் 20 ஆண்டுகளுக்கு பிறகு நிறைந்தது. தற்போது பெய்த மழையில் குண்டாற்றில் வெள்ளம் ஓடுகிறது. கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் கால்வாயில் சீமை கருவேல மரங்கள் அடர்த்தியாக உள்ளது. கால்வாயும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் ரெண்டு கிலோ மீட்டர் தூரத்தில் கால்வாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.பல கோடி நிதியில் தடுப்பணை கட்டியும் கால்வாயை சீரமைக்காததால் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது.இதுகுறித்து விவசாய சங்க தலைவர் ராமபாண்டியன் கூறியதாவது : ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை தான் தொடர்கிறது. விவசாயிகள் வலியுறுத்தினாலும் பொதுப்பணித்துறை கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுப்பது இல்லை. இந்த பகுதி மக்களுக்கு விவசாயம் வாழ்வாதாரமாக இருக்கிறது. தேவையான தண்ணீர் கிடைக்கின்ற சூழ்நிலையில் அதிகாரிகளில் அலட்சியத்தால் உரிய நிதி ஒதுக்கி கால்வாய் பணியை செய்யாததால் தண்ணீர் வீணாகிறது. காலதாமதம் இன்றி கால்வாய் உடைப்பை சரி செய்தும், மழைக்காலம் துவங்குவதற்கு முன்பு சீமை கருவேல மரங்களை அகற்றிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை