உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம்

ராஜபாளையம் : ராஜபாளையம் வேட்டை வெங்கடேசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. மூன்று நாட்களும் விக்னேஸ்வர பூஜை, சுதர்சன ஹோமம் நவகிரக ஹோமம், கோ பூஜை, தீப ஆராதனை யாக சாலை பூஜைகள் கோயில் வளாகத்தில் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 7:45 மணிக்கு வேட்டை வெங்கடேச பெருமாள் கோயில் விமானம், அனுமன், கருப்பசாமி, விநாயகர் உள்ளிட்ட கோயில் கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. சுவாமிக்கு அலங்காரம் நடந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு அன்னதானம் நடந்தது. பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை