உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விளை நிலங்களில் யானை புகுந்து தென்னை, பலா மரங்கள் சேதம்

விளை நிலங்களில் யானை புகுந்து தென்னை, பலா மரங்கள் சேதம்

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் விவசாய தோப்பில் புதிதாக புகுந்த யானை கூட்டம் தென்னை, பலா மரங்களை சேதப்படுத்தி உள்ளது. ராஜபாளையம் அய்யனார் கோயில் செல்லும் மலை பாதையில் பண்டார பாறை அய்யனார் கோயில் ஆற்றின் ஒரு பகுதியான சிங்கிணியாற்று பகுதி அமைந்துள்ளது. சுற்றிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் தென்னை, மா, பலா மர சாகுபடி நடந்து வருகிறது. இங்கு ராஜபாளையத்தை சேர்ந்த கண்ணன் ராஜா, வேல் தேவர், ராம்ஜி, அர்ஜுன் ராஜா, சீனிவாச ராஜா, தர்மா கிருஷ்ணராஜா உள்ளிட்டோருக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கர் விவசாய நிலத்தில் தென்னை, மா, பலா மரங்கள் சாகுபடி நடைபெறுகிறது. கடந்த 10 நாட்களாக இரவு நேரம் வனத்தில் இருந்து ஆறு வழியே உணவு தேடி வரும் 5க்கும் அதிகமான யானை கூட்டம் விவசாய தோப்புகள் புகுந்து தென்னை மர குருத்துகளை பிடுங்கியும், வேரோடு சாய்த்தும், மா, பலா மர கிளைகளை ஒடித்தும் சேதப்படுத்தி உள்ளது.இது குறித்து விவசாயி கண்ணன் ராஜா: 50 ஆண்டுகளாக இப்பகுதி விளைநிலத்தில் யானை நுழைந்தது இல்லை. வனப்பகுதியை விட்டு வெகு தொலைவில் உள்ள இங்கு யானை புகுவதை கட்டுப்படுத்த வழி தெரியாமல் 10 நாட்களாக இரவு காவலர்களை அமர்த்தி கண்காணித்து பட்டாசு வெடித்து விரட்டி வருகிறோம். ஒரு பகுதியில் மிரட்டினால் மற்றொரு பகுதி யானை கூட்டம் சேதத்தை ஏற்படுத்துகிறது. வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் யாரும் நடவடிக்கை இல்லை. சேதமான மரங்கள் ஒரு புறம் இருந்தாலும் இவற்றை அப்புறப்படுத்தி மீண்டும் வளர்த்து எடுக்க மிகுந்த பொருட்செலவும் காலமும் ஆகும். ஏற்கனவே தேங்காய்க்கு விலையும், மா விளைச்சல் இன்றி உள்ள நிலையில் வனத்துறையினர் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுப்பதுடன் இழப்பீடு வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை