உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆடி அமாவாசை குண்டாற்றில் தர்ப்பணம்

ஆடி அமாவாசை குண்டாற்றில் தர்ப்பணம்

திருச்சுழி : ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்சுழி குண்டாற்றில் பக்தர்கள் தர்ப்பணம் செய்தனர்.திருச்சுழியில் உள்ள குண்டாற்றில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்தால் காசி, ராமேஸ்வரத்தில் செய்த புண்ணியம் கிடைக்கும். நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு குண்டாற்றில் உள்ளூர், வெளியூரை சேர்ந்த மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். குண்டாற்றில் தண்ணீர் வரத்து இல்லாததால் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் காசு கொடுத்து பக்தர்கள் நீராடி தர்ப்பணம் செய்தனர். பின்னர் திருமேனிநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.ஆடி அமாவாசை, தை, புரட்டாசி மாதங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் குண்டாற்றில் மக்களுக்கு தேவையான வசதிகள் இல்லை. உடை மாற்ற, குளிக்க உட்பட வசதிகள் செய்யப்படவில்லை. ஆற்றில் கழிவுநீர் சேர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை