உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு ஆலை விபத்தில் பலி 3 ஆக உயர்வு

பட்டாசு ஆலை விபத்தில் பலி 3 ஆக உயர்வு

சிவகாசி, : சிவகாசி சோலை காலனியை சேர்ந்தவர் முருகவேல். இவருக்கு எம்.புதுப்பட்டி அருகே காளையார்குறிச்சியில் நாக்பூர் உரிமம் பெற்ற சுப்ரீம் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு ஜூலை 9ல் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிதம்பராபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் 47, முத்து முருகன் 45 சம்பவஇடத்திலேயே பலியாகினர். சித்தமநாயக்கன்பட்டியை சேர்ந்த சரோஜா 55, செவலுாரை சேர்ந்த சங்கரவேல் 54, காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரிமருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நேற்று இரவு சரோஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ