உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி., ரத வீதிகளை விரைந்து சீரமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு

ஸ்ரீவி., ரத வீதிகளை விரைந்து சீரமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆக. 7ல் தேரோட்டம் நடக்க உள்ள நிலையில் ரத வீதிகளில் தோண்டப்பட்ட ரோடுகளை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.இக்கோயிலில்ஆடி மாதம் பூர தேரோட்ட திருவிழாவில் அதிக உயரமும், எடையும் கொண்ட இக் கோயில் தேர் எவ்வித இடையூறும் இன்றி வருவதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு அதிக அழுத்தத்தை தாங்க கூடிய வகையில் ரோடு அமைக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேரோடும் நான்கு ரத வீதிகளிலும் உள்ள மின் வயர்கள் தரைத்தளத்தில் கொண்டு செல்வதற்காக பல இடங்களில் ரோடுகள் தோண்டப்பட்டது.குடிநீர் குழாய் உடைப்பின் காரணமாக தோண்டப்பட்ட ரோடுகளும் சரிவர போடாமல் உள்ளது. இதனால் 4 ரக வீதிகளிலும் உள்ள தார் ரோடுகள் வலுவிழந்து, ஆங்காங்கே சேதமடைந்து அலங்கோலமாக காணப்படுகிறது.ஆக.7ல் தேரோட்டம் நடக்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தோண்டப்பட்ட ரோடுகளை, தேரின் எடையை தாங்கும் வகையில் தரமானதாக அமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை