மேலும் செய்திகள்
மரக்கன்று நடும் விழா
7 hour(s) ago
செவிலியர்கள் போராட்டம்
7 hour(s) ago
கூடைப்பந்து போட்டி
7 hour(s) ago
5 பேர் மீது போக்சோ
7 hour(s) ago
விஜய கரிசல்குளத்தில் வெளிமாவட்ட பார்வையாளர்கள்
7 hour(s) ago
விருதுநகர் : வேளாண் இணை இயக்குனர் விஜயா செய்திக்குறிப்பு: வேளாண்துறையின் அட்மா திட்டத்தின் கீழ் ரசாயன உர பயன்பாட்டினை குறைத்து ஒருங்கிணைந்த உர நிர்வாகம் மூலம் சாகுபடி செய்தல் என்ற தலைப்பின் கீழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் ஒரு நாள் பயிற்சி வழங்கப்படுகிறது.ஜூன் 11ல் காரியாபட்டி, ஜூன் 13ல் ராஜபாளையம் சுந்தர்ராஜபுரம், வத்திராயிருப்பு துலுக்கப்பட்டி, சாத்துார் சின்னக்காமன்பட்டி, நரிக்குடி வரிசையூர், ஜூன் 14ல் ஸ்ரீவில்லிபுத்துார் தொம்பக்குளம், 18ல் விருதுநகர் மருளூத்து, 19ல் அருப்புக்கோட்டை பெரியநாயகபுரம், எம்.ரெட்டியபட்டி குலசேகரநல்லுார், சிவகாசி ஈஞ்சார், வெம்பக்கோட்டை மம்சாபுரம் பகுதிகளில் நடக்கிறது.ஓரளவு படிக்க தெரிந்த விவசாயிகள் வயது 18 முதல் 60க்குள் இருக்க வேண்டும். ஏற்கனவே அட்மா திட்டத்தின் கீழ் பயிற்சி பெறாத விவசாயிகள், விவசாயக்குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஒரு பயிற்சிக்கு 40 விவசாயிகளுக்கு மட்டுமே அனுமதி உள்ளதால் ஆர்வமுள்ள விவசாயிகள் உழவன் செயலி மூலம் அல்லது சம்மந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி தங்கள் பெயரை விரைந்து பதிவு செய்து கொள்ள வேண்டும், என்றார்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago