உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இயல்பு நிலைக்கு திரும்பிய பட்டாசு, தீப்பெட்டி தொழில்கள்

இயல்பு நிலைக்கு திரும்பிய பட்டாசு, தீப்பெட்டி தொழில்கள்

சிவகாசி: லோக்சபா தேர்தலால் விருதுநகர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சிவகாசி, சாத்துார் சட்டசபை தொகுதியில் பிரசாரம், பொதுக்கூட்டத்திற்கு தொழிலாளர்கள் சென்றதால் பட்டாசு உற்பத்தி பாதித்த நிலையில் தற்போது ஆலைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.சிவகாசி, சாத்துார் சட்டசபை தொகுதியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில் பிரதானமாக உள்ளது. இந்நிலையில் லோக்சபா தேர்தல் தமிழகத்தில் நேற்று முன்தினம் முடிந்தது. தேர்தலை முன்னிட்டு கட்சியினர் பொதுக்கூட்டம் பிரசாரத்திற்கு கூட்டத்தை சேர்ப்பதற்காக இந்த தொழிலாளர்களை தான் நாடினர். இதற்காக தொழிலாளர்களும் தங்கள் வேலையை விட்டுவிட்டு கூட்டத்திற்கு வந்தனர்.வேலை செய்தால் கிடைக்கும் கூலியை விட கூட்டத்திற்கு கிடைக்கும் பணம் குறைவு தான் என்றாலும் கட்சியினரின் கூட்டத்திற்கு சென்று வந்தனர். ஒரு மாதமாக இந்த நிலை நீடித்ததால் பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழில் உற்பத்தி பாதிக்கப்பட்டு உற்பத்தியாளர்கள் கவலையில் இருந்தனர். நேற்று முன்தினம் லோக்சபா தேர்தல் முடிந்தது.இதனைத் தொடர்ந்து அனைத்து தொழிலாளர்களும் அவரவர் வேலைக்கு கிளம்பியதால் அனைத்து ஆலைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியது. இனி வழக்கமான உற்பத்தி நடைபெறும் என்பதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி