உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வேட்புமனு பரிசீலனையில் ஓரவஞ்சனை; அ.தி.மு.க.,வினர் வாக்குவாதம் 

வேட்புமனு பரிசீலனையில் ஓரவஞ்சனை; அ.தி.மு.க.,வினர் வாக்குவாதம் 

விருதுநகர் : விருதுநகரில் வேட்பு மனு பரிசீலனையில் வேட்பாளர் பரிந்துரை கடிதம் இருந்தும் அனுமதிக்காமல், காங். கட்சியினரை மட்டும் அனுமதித்து போலீசார், அலுவலர்கள் ஓரவஞ்சனை செய்வதாக அ.தி.மு.க.,வினர் குற்றஞ்சாட்டினர்.விருதுநகரில் நேற்று காலை 11:00 மணிக்கு வேட்புமனு பரிசீலனை துவங்க வேண்டியது. ஆனால் தாமதமானது.தே.மு.தி.க., வேட்பாளர் விஜயபிரபாகரனுக்காக வந்திருந்த அ.தி.மு.க.,வினரை போலீசார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து தாங்கள் பரிந்துரை கடிதம் வைத்தும் ஏன் அனுமதிக்கவில்லை என கேள்வி எழுப்பினர். போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். கடிதத்தை சரிவர போலீசார் பார்க்கவில்லை என அதிகாரிகளிடம் குற்றம்சாட்டினர்.இந்நிலையில் அங்கு காத்திருந்த பா.ஜ.,வினரும் கேள்வி எழுப்பினர். வேட்புமனு பரிசீலனை தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளிப்போம் என அ.தி.மு.க.,வினர் கூறினர். இந்நிலையில் அதிகாரிகள் சமாதானப்படுத்தி கால் மணி நேர தாமதமாக வேட்பு மனு பரிசீலனையை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ