உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / லாரியில் ரூ. 2.47 லட்சம் பறிமுதல்

லாரியில் ரூ. 2.47 லட்சம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அழகாபுரி சோதனை சாவடியில் வாகன தணிக்கை அலுவலர் தனலட்சுமி தலைமையிலான குழுவினர், நேற்று மாலை 4:15 மணிக்கு வாகன சோதனை செய்து வந்தனர்.அப்போது சென்னை திருவொற்றியூர் குப்பத்தைச் சேர்ந்த செந்தில்குமார், 43, ஓட்டி வந்த மீன் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் ஆவணமில்லாமல் ரூ.2. 47 லட்சம் இருப்பது கண்டறியப்பட்டது.இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலர் கணேசன், தாசில்தார் முத்துமாரி விசாரித்து அதிகாரிகள், பணத்தை பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை