மேலும் செய்திகள்
மரக்கன்று நடும் விழா
5 hour(s) ago
செவிலியர்கள் போராட்டம்
5 hour(s) ago
கூடைப்பந்து போட்டி
5 hour(s) ago
5 பேர் மீது போக்சோ
5 hour(s) ago
விஜய கரிசல்குளத்தில் வெளிமாவட்ட பார்வையாளர்கள்
5 hour(s) ago
சாத்துார், : சாத்துார் நகராட்சி பகுதியில் தெருக்களில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தென் வடல் புது தெரு, காட்டுப்புது தெரு, கட்டில் கட்டும் தெரு, நந்தவனப்பட்டி தெரு, வெள்ளக்கரைரோடு, ஆகிய பகுதிகளில் தெருக்கள் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக வெள்ளக்கரை ரோடு பகுதியில் ஓடைப்பகுதியை ஆக்கிரமித்து பலர் வீடுகள் கட்டியுள்ளனர்.சாக்கடை வாறுகாலை ஆக்கிரமிப்பு செய்து இந்தப் பகுதியில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் 30 அடி 40 அடி அகலத்தில் இருந்த பாதைகள் சுருங்கி தற்போது 15 அடி 20 அடி பாதையாக மாறிவிட்டது. நகராட்சியின் முக்கிய பகுதியான இந்த பகுதியில் அதிகளவில் மக்கள் வசிக்கின்றனர்.லாரிகள் சென்று வந்த தெருக்களில் தற்போது ஆட்டோக்கள் கூட செல்ல முடியாத நிலையில் பாதை மிகவும் குறுகிவிட்டது. மேலும் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு காரணமாக ஆம்புலன்ஸ் தீயணைப்பு மீட்பு வாகனங்கள் கூட தெருவுக்குள் வர முடியாத நிலை உள்ளது.நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டாது நகராட்சி தெருக்களை ஆக்கிரமித்துள்ள கட்டடங்களையும் கடைகளையும் அகற்றி நெரிசலற்ற போக்குவரத்திற்கு வழி காண வேண்டும்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago