உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மருத்துவ முகாமில் பயன்பெற அழைப்பு

மருத்துவ முகாமில் பயன்பெற அழைப்பு

விருதுநகர் : மண்டல பதிவாளர் செந்தில்குமார் செய்திக்குறிப்பு: ராஜபாளையம் தளவாய்புரத்தில் ஆ.ச.பழனிச்சாமி நாடார் சுகாதார கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே மருத்துவ சேவை வழங்கும் ஒரே கூட்டுறவு நிறுவனம். இச்சுகாதார சங்கத்தின் மூலம் தளவாய்புரத்தை சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் குறைந்த கட்டணத்தில்மருத்துவச் சேவை பெற்று வருகின்றனர். மே 1 முதல் 31 வரையில் இச்சங்கத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்து வருகிறது. இதில் ரத்த பரிசோதனை மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, உப்புச்சத்து, சிறுநீரக செயல்பாடு, மஞ்சள் காமாலை நோயின் அளவு, ரத்த அழுத்தம், முழு ரத்த அளவு, சளி பரிசோதனை, ரத்த தொற்று பரிசோதனை, இ.சி.ஜி., போன்ற பரிசோதனைகள் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது. கூட்டுறவுத்துறை பணியாளர்கள், மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் உடல்நிலை பரிசோதிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மருத்துவமனை செயல் ஆட்சியர் எண் 76959 53836, செயலாளர் எண் 98657 74093ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை