உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு மேல்நிலைப் பள்ளியை ஆய்வு செய்த நீதிபதிகள்

அரசு மேல்நிலைப் பள்ளியை ஆய்வு செய்த நீதிபதிகள்

அருப்புக்கோட்டை : திருச்சுழியில் கோர்ட்டுகளை ஆய்வு செய்ய வந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் திடீரென்று அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று அங்கு ஆய்வு செய்தனர்.திருச்சுழியில் உள்ள கோர்ட்டுகளை ஆய்வு செய்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, ராமகிருஷ்ணன் தாலுகா அலுவலகம் அருகில் புதியதாக கட்டப்படும் கோர்ட்டு கட்டட பணிகளை பார்வையிட்டனர். அங்கிருந்து வரும்போது கோர்ட்டுக்கு அருகில் உள்ள சேதுபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்கள் வெளியில் அமர்ந்து படித்துக் கொண்டு இருப்பதை பார்த்து பள்ளிக்குச் சென்று பார்வையிட்டனர்.பள்ளியில் இருந்த தலைமை ஆசிரியர் சித்திரவேலுவிடம், ஏன் மாணவர்கள் வெளியில் அமர்ந்து படிக்கின்றனர். போதுமான வகுப்பறைகள் இல்லையா என கேள்வி எழுப்பினர். அதற்கு தலைமையாசிரியர் கூடுதல் வகுப்பறைகள் இல்லை என கூறினார். உடன் திருச்சுழி தாசில்தாரை அழைத்து பள்ளிக்குத் தேவையான வகுப்பறைகளை செய்து தர இடம் உள்ளதா என கேள்வி அது குறித்தான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ