உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / புரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிவகாசி : எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லுாரியில் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு கல்லுாரி வணிகவியல் துறை (சுயநிதி), வணிகவியல் துறை, காளீஸ்வரி கல்லுாரி சார்பில் சிறப்பு சொற்பொழிவு, புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது. கல்லுாரி நிர்வாகக் குழு உறுப்பினர் மகேஸ்வரன் முன்னிலை வகித்தார். முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார். உதவிப் பேராசிரியர் விஷ்ணு பிரியா வரவேற்றார். விருதுநகர் தொழிலதிபர் இதயம் முத்து நேருக்கு நேர் என்ற தலைப்பில் மாணவிகளுடன் கலந்துரையாடினார். எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லுாரி, காளீஸ்வரி கல்லுாரியில் வணிகவியல் துறை மாணவிகள் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் பத்மஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ