மேலும் செய்திகள்
ஸ்ரீ ரமண அகாடமியில் கணித கண்காட்சி
16 hour(s) ago
மனித உரிமை தின விழிப்புணர்வு
17 hour(s) ago
பா.ஜ., மனு
17 hour(s) ago
ஊர்க்காவல் படையில் சேர அழைப்பு
17 hour(s) ago
புல்ஸ்டாக் டெவலப்மெண்ட் பயிற்சி முகாம்
17 hour(s) ago
சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் சுண்டங்குளத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள திறந்தவெளி கிணற்றினால்மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே கிணற்றிற்கு உடனடியாக மூடி அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏ. லட்சுமியாபுரம் ஊராட்சி சுண்டங்குளம் நடுத்தெருவில் குடியிருப்புகளுக்கு மத்தியில் கிணறு உள்ளது. ஆரம்ப காலத்தில் பயன்பாட்டில் இருந்த இந்த கிணறு தற்போதும் தண்ணீர் உள்ள நிலையில் திறந்த நிலையில் காணப்படுகின்றது. இதன் சுற்றுச் சுவர் உயரமாக இருந்த நிலையில் சுற்றிலும் பேவர் பிளாக் பதிக்கப்பட்டது. இதனால் சுற்றுச் சுவரின் உயரம் மிகவும் குறைந்து விட்டது. கிணற்றின் அருகே விபரீதம்அறியாமல் குழந்தைகள் விளையாடுகின்றனர். மேலும் கிணற்றின் அருகிலேயே சைக்கிள், டூ வீலரில், நடந்து மக்கள் செல்கின்றனர். கொஞ்சம் கவனக்குறைவு ஏற்பட்டாலும் உள்ளே விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.இரவில் கிணற்றின் அருகே நடமாடுவதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர்.ஏனெனில் இதனைக் கடந்து தான் தங்களது வீடுகளுக்கு செல்ல வேண்டும். எனவே உடனடியாக கிணற்றிற்கு மூடி அமைக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
16 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago