உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பஸ் ஸ்டாண்டிற்குள் நிகழ்ச்சி

பஸ் ஸ்டாண்டிற்குள் நிகழ்ச்சி

விருதுநகர் : விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் நேற்று காலை புதிய பஸ்களை பயன்பாட்டிற்காக துவங்கி வைக்கும் விழா நடந்ததால் பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள ரோடுகளில் மற்ற பஸ்கள் பயணிகளை ஏற்றி, இறக்கி சென்றதால் காலை வேளையில் இரண்டு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மக்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகினர்.விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் நேற்று காலை புதியதாக வாங்கப்பட்ட 29 பஸ்களை பயன்பாட்டிற்கு அளிக்கும் நிகழ்ச்சி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடந்தது.முன்னேற்பாடாக வாகன போக்குவரத்தில் எவ்வித மாற்றமும் செய்யாததால் இதற்காக காலை முதலே பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்லும் அனைத்து பஸ்களும் வெளிப்புற ரோட்டில் பயணிகளை, ஏற்றி இறக்கினர். புதிய பஸ்கள் அனைத்தும் பஸ் ஸ்டாண்டிற்குள் நிறுத்தப்பட்டன. இதனால் பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள ரோடுகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் காலை நேரம் என்பதால் பள்ளி வாகனங்கள் அதிகம் பயன்படுத்தும் ரோடான இதில் பஸ்கள் அணிவகுத்து நின்று மெல்ல மெல்ல பயணிகளை ஏற்றி சென்றதால் மக்கள் பாதிப்பை சந்தித்தனர்.மேலும் பிள்ளைகளை டூவீலரில் பள்ளிக்கு அழைத்து செல்லும் பெற்றோரும் பாதிக்கப்பட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடினர். ஆனால் போக்குவரத்தில் மாற்றம் எதுவும் செய்யாமல் முன்னேற்பாடு ஏதுமின்றி துவங்கியதாலும், போலீசார் டிராபிக்கை சரி செய்யாததாலும் பழைய பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள ரோடுகளில் எதிர்பாராத விதமாக சென்ற மக்கள் பாதிப்பை சந்தித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை