உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மீன்பாசி பிரச்னை தகராறில் மறியல்

மீன்பாசி பிரச்னை தகராறில் மறியல்

ராஜபாளையம்: ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லுார் ஊராட்சிக்குட்பட்டது முதுகுடி கிராமம். முன்பு நாட்டாமையாக இருந்த கருப்பையாவின் பெயரில் முதுகுடி கண்மாய் மீன் பாசி ஏலம் எடுக்கப்பட்டது. அவருக்கு பதில் ராஜன் என்பவர் பொறுப்பேற்ற நிலையில் கண்மாயில் தொடர்ந்து பழையபடி கருப்பையா மீன்பிடித்து வந்ததை அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.மீன் பாசி ஏலத்தை முதுகுடி மக்கள் பெயரில் மாற்றியபின் தற்போதைய ஊர் தலைவருடன் சேர்ந்து சிலர் மீன் பிடிக்க சென்றதை முன்னாள் தலைவர் மற்றும் சிலர் தடுத்து மிரட்டியதாக கூறி மக்கள் சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தையடுத்து ஒரு மணி நேரத்துக்குப் பின் மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ