மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
17 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
17 hour(s) ago
சிவகாசி:விருதுநகர் மாவட்டம், விஜய கரிசல்குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணால் ஆன புகைப்பிடிப்பான் கருவி மற்றும் குழாய் கண்டெடுக்கப்பட்டன.விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வில் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, பெண்ணின் தலைப்பகுதி, கண்ணாடி மணிகள், வட்ட சில்லு, அகல் விளக்கு, எலும்புகள், சங்கு வளையல்கள் என, 1,019 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் புதிதாக தோண்டப்பட்ட குழியில் உடைந்த நிலையில் சுடு மண்ணால் ஆன புகை பிடிப்பான் கருவி, குழாய் கண்டெடுக்கப்பட்டது. அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், ''ஏற்கனவே நடந்த அகழாய்விலும் புகை பிடிப்பான் கருவி கண்டெடுக்கப்பட்டிருந்தது. தற்போது உடைந்த நிலையில் புகைப்பிடிப்பான் கருவி கிடைத்துள்ளது. வேலை பளுவினால் ஓய்வின்போது, முன்னோர்கள் புகை பிடித்து இருக்கலாம் என தெரிய வருகிறது,'' என்றார்.
17 hour(s) ago
17 hour(s) ago