உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்தி

இருவர் கைது

ராஜபாளையம்: ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியை சேர்ந்தவர் காளிராஜ் 30, நகராட்சி தண்ணீர் திறந்து விடும் ஒப்பந்த பணியாளர். இவருடன் நகராட்சி பணியாளர் முத்துக்குமார் இருவரும் சேர்ந்து மங்காபுரம் தெரு மேல்நிலை தேக்க குடிநீர் தொட்டி அருகே உள்ள தண்ணீர் குழாயை திறந்து விட சென்றுஉள்ளனர். அங்கு வந்த மங்காபுரத்தை சேர்ந்த சரவணன் 24, காளிராஜ் 24, எங்கள் சமுதாய மண்டபத்திற்கு தண்ணீர் திறந்து விடாதது ஏன் எனக் கூறி நகராட்சி பணியாளர் காளிராஜை அடித்து, காலால் மிதித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துஉள்ளார். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக சரவணன், காளிராஜ் இருவரையும் 5 பிரிவுகளின் கீழ் தெற்கு போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆறு பேர் மீது வழக்கு

சேத்துார்: தளவாய்புரம் அருகே சுந்தர நாச்சியார் அம்மன் கோயில் திருவிழாவில்முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. பங்கேற்ற சிலர் மது போதையில் அசிங்கமாக பேசியதை தட்டி கேட்டதில் அயன் கொல்லங் கொண்டானை சேர்ந்த கனகராஜ் 20, நல்ல மாடன், சதீஷ்குமார் உட்பட 9 பேருக்கு காயம் ஏற்பட்டு முருகன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன், இசக்கி முத்து என இரு தரப்பிலும் 6 பேர் மீது சேத்துார் ஊரக போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

முதியவர் பலி

சாத்துார்: சிவகாசி விஸ்வநத்தத்தை சேர்ந்தவர் ராமர், 60. ஜூலை 4 காலை 10:40 மணிக்கு க.சத்திரப்பட்டி பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தபோது சிவகாசியில் இருந்து வெம்பக்கோட்டை சென்றலாரி மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். லாரி டிரைவர் எழுவன் பச்சேரி பிரகாஷிடம் 21. வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

ஒருவர் காயம்

சாத்துார்: துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் சங்கர். 45. ஓய்வு பெற்ற ராணுவ வீரர். ஜூலை 3 ஆலங்குளம் கிராமத்தில் நடந்த திருமணத்திற்கு டூவீலரில் வந்தார். முத்துச்சாமிபுரம் விலக்கு அருகே வந்த போது எதிரில் வந்த லோடு வேன் மோதியதில் காயம் அடைந்தார். சிவகாசியை சேர்ந்த வேன் டிரைவர் பிரபாகரனிடம் ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

சிறுமி மாயம்

சாத்துார்: ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் அய்யனார், 49. இவரது 17 வயது மகள் ஜூலை 4 வீட்டில் இருந்தவர் மாயமானார். ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

முன் விரோதத்தில் 4 டூவீலர்கள் எரிப்பு

சிவகாசி: சிவகாசி சாட்சியாபுரம் கந்தபுரம் காலனியைச் சேர்ந்தவர் ஆபிரகாம் 60. இவரது மகன் தெருவில் டூவீலரில்வேகமாக சென்றதற்கு அவருக்கும் ஆயில் மில் காலனியை சேர்ந்த ஜாபருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதனால் ஆபிரகாம் கந்தபுரம் காலனிக்கு குடி பெயர்ந்தார். இந்நிலையில் ஜாபர் நேற்று முன்தினம் இரவு ஆபிரகாம் வீட்டின் முன் நிறுத்தப்பட்டுள்ள நான்கு டூவீலர்களை எரித்து சேதப்படுத்தினார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தந்தையை வெட்டிய மகன்

காரியாபட்டி: காரியாபட்டி கெப்பிலிங்கம்பட்டியைச் சேர்ந்த முருகன் 53. இவரது மூத்த மகன் குருமுருகன் மது போதையில் மனைவி பிரியாவை தாக்கினார். தடுக்க சென்ற தந்தை முருகனை தகாத வார்த்தையில் பேசி, அரிவாளால் வெட்டியதில் கையில் காயம் ஏற்பட்டது. மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.

மூதாட்டி சடலமாக மீட்பு

விருதுநகர்: விருதுநகர் தர்க்காஸ் தெருவை சேர்ந்த மஹரிபா பானு 80. இவர் தனிவீட்டில் வசித்து வந்தார். சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர், பழைய பொருட்களை சேகரித்து இரும்பு கடையில் போடுவார். மகனான ஜாகிர் உசேன், மகள் சகிலா பேகம் ஆகியோர் அடிக்கடி பார்த்து சென்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மஹரிபா பானு வீட்டின் அருகே வசிப்பவர்கள் துர்நாற்றம் வீசுவதாக கூறினர். ஜாகீர் உசேன் வீட்டிற்கு சென்று பார்த்த போது உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். மேற்கு போலீசார் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.

இளம்பெண் மர்மச்சாவு

விருதுநகர்: விருதுநகர் ஓ.கோவில்பட்டியை சேர்ந்த ஜீவிதா 20. இவருக்கு செல்வா என்பவருடன் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. இவருக்கு மே மாதம் 7 மாதம் ஆண் குழந்தை பிறந்து இறந்தது. இதனால் கணவர் வீட்டாருடன் பிரச்சனை ஏற்பட்டது. இந்நிலையில் ஜூலை 3 ல் டூவீலரில் செல்லும் போது தவறி விழுந்து ஜீவிதாவிற்கு தலையில் அடிபட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். தனது மகள் சாவில் தனக்கு சந்தேகம் இருப்பதாக ஜீவிதா தந்தை சேகர் புகாரில் ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை