உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

ஆட்டோ மோதி பலிவிருதுநகர்: எரிச்சநத்தத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் ஆக. 18ல் இரவு 7:30 மணிக்கு விருதுநகர் - சிவகாசி ரோட்டில் அழகாபுரி விலக்கில் ஆட்டோவில் சென்ற போது நடந்து சென்ற திர்பு 55, மீது மோதியதில் காயமடைந்து, விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஆக. 19 அதிகாலை 1:00 மணிக்கு பலியானார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.பட்டாசு திரி, இருவர் கைதுவிருதுநகர்: விஸ்வகர்மா நகரைச் சேர்ந்தவர் அய்யனார் பாண்டி 44. இவர் அனுமதியின்றி 3 கட்டு பட்டாசு மிஷின் திரிகளை பதுக்கி வைத்திருந்தார். அதே போல கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி 32. இவர் 9 கட்டு மிஷின் திரிகளை வைத்திருந்தார். ஆமத்துார் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.தந்தையை கழுத்தறுத்த மகன்விருதுநகர்: ஒ.கோவில்பட்டியைச் சேர்ந்தவர் நாராயணன் 65. இவருக்கு சொந்தமான நிலத்தில் பங்கு கேட்டு மகன் ராமர் நேற்று காலை தகராறு செய்து, தந்தை நாராயணனின் கழுத்தை கத்தியால் அறுத்ததில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.மரத்தடியில் பட்டாசுஉரிமையாளர், மேலாளர் கைதுவிருதுநகர்: கோவிந்தநல்லுாரைச் சேர்ந்தவர் தெய்வநாயகம் 33. இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் மரத்தடியில் ஆட்களை வைத்து பூச்சட்டி 30 குரோஸ், தரைச்சக்கரம் 30 குரோஸ் தயார் செய்தனர். வச்சக்காரப்பட்டி போலீசார் உரிமையாளர் தெய்வநாயகம், மேலாளர் முருகேசன் 50, கைது செய்தனர்.முதியவர் பலிசாத்துார்: சாத்துார் ஒத்தையால் கிராமத்தை சேர்ந்தவர் கொண்டு சாமி,77. நேற்று முன்தினம் காலையில் இவருடைய விவசாய நிலத்தில் உள்ள கிணறு அருகே நடந்து சென்றபோது கால் தடுமாறி கிணற்றுக்குள் விழுந்து நீரில் மூழ்கி பலியானார். தீயணைப்பு துறை வீரர்கள் உடலை மீட்டனர்.சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.பட்டாசு பதுக்கிய 5 பேர் கைதுசிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கலை சேர்ந்த பால்பாண்டி தனது வீட்டருகே தகர செட் அமைத்து பட்டாசு பதுக்கி வைத்திருந்தார். பால்பாண்டியை கைது செய்த திருத்தங்கல் போலீசார், ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். திருத்தங்கல் முத்துமாரி நகரில் உள்ள தகர செட்டில் பட்டாசு பதுக்கிய வெங்கடேஷை போலீசார் கைது செய்தனர். சிவகாசி சிவானந்தா நகரை சேர்ந்த ஆனந்தகுமார் 40, நேரு காலனியை சேர்ந்த பாலசண்முகம் 44, ஆகியோர் எரிச்சநத்தம் - சிவகாசி ரோட்டில் உள்ள சித்தமநாயக்கன்பட்டியில் உள்ள கட்டடத்தில் அனுமதி இன்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தனர். இருவரையும் கைது செய்த எம்.புதுப்பட்டி போலீசார், ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல் சிவகாசி அருகே மீனம்பட்டியில் தகர செட்டில் பேன்சி ரக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த சேகரை போலீசார் கைது செய்தனர்.-----திருவிழாவில் தகராறுசிவகாசி: மாரனேரி பர்மா காலனியை சேர்ந்தவர் சரவணன் 50. இங்குள்ள கோயில் திருவிழாவில் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மது அருந்தி ஊர் மக்களை அவ மரியாதையாக பேசியுள்ளார். இதை சரவணன் கண்டித்தார். ஆத்திரமடைந்த முருகன், குமாரி, அம்மு, அபி, ஜானகி, கவுரி கமல், அசோக் ஆகியோர் சரவணன் அவரது மனைவியை தகாத வார்த்தை பேசி அடித்தனர். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.டிராக்டர் திருட்டுகாரியாபட்டி: தூத்துக்குடி கே.புதுப்பட்டியைச் சேர்ந்த சொரிமுத்து 46, காரியாபட்டி நாகம்பட்டி அருகே உழவு பணிக்காக வாடகைக்கு டிராக்டர் கொண்டு வந்தார். அங்குள்ள ரயில்வே சுரங்கப்பாதை அருகே நிறுத்தி இருந்த டிராக்டரை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம். மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்