உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரோட்டின் ஓரத்தில் தாழ்வாக செல்லும் மின்ஒயர்கள்;: விவசாயிகள் அச்சம்

ரோட்டின் ஓரத்தில் தாழ்வாக செல்லும் மின்ஒயர்கள்;: விவசாயிகள் அச்சம்

விருதுநகர் ; விருதுநகர் சின்ன பேராலி ரோடு ஓரத்தில் வயல்கள் அருகே மின்வயர்கள் தாழ்வாக செல்வதால் விவசாயப் பணிகளுக்காக டிராக்டர்கள் ஓட்டிச் செல்லும் போது அச்சத்துடன் செல்ல வேண்டியிருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.விருதுநகரில் இருந்து சின்ன பேராலிக்கு தேவையான மின்சாரம் ரோட்டின் ஓரத்தில் நிறுவப்பட்ட மின் கம்பங்கள் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இந்த மின் வயர்கள் வயல்கள் அருகே தாழ்வாக செல்கிறது. இவற்றை கடந்து உழவுப்பணிக்கு டிராக்டர்களை ரோட்டில் இருந்து வயல்களில் இறக்க வேண்டியுள்ளது.மின் வயர்கள் தாழ்வாக செல்வதால் டிராக்டர்கள் மீது உராய்வு ஏற்பட்டு விபத்து நிகழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டிராக்டர்களை கொண்டுவர முடியாமல் பரிதவித்து வருகின்றனர். மேலும் குறுகலான ரோடு என்பதால் எதிரெதிர் திசையில் வரும் வாகனங்கள் வழி விடுவதற்காக ஓதுங்கும் போது மின் வயர்கள் மீது பட்டு விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் விளை நிலங்கள் வழியாக தாழ்வாக செல்லும் மின்வயர்களை அதிகாரிகள் ஆய்வு செய்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ