உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி --- -சிவகாசி ரோட்டில் டூவீலர் விபத்துகள் அதிகரிப்பு; தடுப்பு நடவடிக்கைகள் அவசியம்

ஸ்ரீவி --- -சிவகாசி ரோட்டில் டூவீலர் விபத்துகள் அதிகரிப்பு; தடுப்பு நடவடிக்கைகள் அவசியம்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் - சிவகாசி ரோட்டில் டூவீலர் விபத்துகள் அதிகளவில் நடக்கிறது. இதை தடுக்க விபத்து தடுப்பு நடவடிக்கைகள் அவசியமாகிறது.ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த ஏராளமான அரசு, தனியார் ஊழியர்கள், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் தினமும் தங்கள் தொழில், வேலைவாய்ப்பு, கல்வி ரீதியாக சிவகாசி சென்று வருகின்றனர். தேவையான அளவு பஸ் வசதி இருந்தாலும், சிவகாசியில் தங்கள் பணி இடத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதால் டூவீலர்களில் அதிகம் பேர் பயணிக்கின்றனர்.இதே போல் சிவகாசியில் இருந்தும் ஏராளமானோர் டூவீலரில் ஸ்ரீவில்லிபுத்துார் நோக்கி வருகின்றனர். இதனால் காலை, மாலை நேரங்களில் டூவீலரில் வருவோர் அதிவேகத்தில் செல்கின்றனர்.அதே நேரம் ரோட்டின் இருபுறமும் உள்ள கிராமங்களில் இருந்து மெயின் ரோட்டிற்கு வருபவர்கள் தங்கள் வாகனங்களின் வேகத்தை குறைக்காமல் திரும்பும் போது விபத்துகள் நடக்கின்றன. விபத்துக்கள் தொடர்பாக மல்லி போலீஸ் ஸ்டேஷனில் மாதம் 10 முதல் அதிகபட்சம் 20 வழக்குகள் பதிவாகிறது.இதனால் இந்த வழித்தடத்தில் சராசரியாக தினமும் ஒரு டூவீலர் விபத்தாவது நடந்து விடுகிறது. எனவே இந்த வழித்தடத்தில் விபத்துகளை தடுக்க சரியான திட்டமிடலுடன் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் அவசியம் எடுக்கப்பட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை