உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு கடை பகுதிகளில் சருகுகளுக்கு தீ வைப்பதால் விபத்து அபாயம்

பட்டாசு கடை பகுதிகளில் சருகுகளுக்கு தீ வைப்பதால் விபத்து அபாயம்

விருதுநகர் : விருதுநகர் - சிவகாசி ரோட்டில் அதிகளவிலான பட்டாசு கடைகள் உள்ளன. இவற்றை சுற்றிலும் காய்ந்த சருகுகள் இருப்பதால் அவற்றை மர்ம நபர்கள் சிலர் தீ வைப்பதால் விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.விருதுநகர் - சிவகாசி ரோட்டில் பட்டாசு கடைகள் அதிகளவில் உள்ளன. பட்டாசு கடைகள் எதிலும் பழைய பட்டாசுக்கள் இருப்பு வைக்கப்படுவது கிடையாது.90 சதவீதம் வாய்ப்பில்லாத சூழல் தான் உள்ளது. இருப்பினும் சென்ற ஆண்டு தீபாவளி நேரத்தில் விற்பனையாகாத பட்டாசுக்களை சிறிதளவேனும் இருப்பு வைக்கப்பட்டிருந்தால் இது போன்று கடைகளை சுற்றி சருகுகளை எரிப்பது விபத்து அபாயத்தை ஏற்படுத்தும். காய்ந்த சருகுகள், செடிகளை எங்கிருந்தாலும் சில மர்ம நபர்கள் தீ வைக்கின்றனர். இதனால் பல இடங்களில் தீப்பிடிக்கிறது. அதுவும் கோடை என்பதால் அணைக்க கடும் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது.பெரும்பாலான கடைகளில் இருப்பு இருப்பதில்லை. இருப்பினும் அதில் மின் சப்ளையோ, யாரெனும் தெரியாமல் இருப்பு வைத்திருந்தால் வெடி விபத்து அபாயம் அதிகம் உள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் உயிர் சேதம் இருக்காது. இருப்பினும் கடை சேதம், மீட்பு பணியின் போது பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.இது போன்ற அபாயம் உள்ள பகுதிகளில் தீ வைப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்து ஏற்படும் முன் தேவையான வழிகாட்டுதல் வழங்க தீயணைப்புத்துறை முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை