| ADDED : ஜூலை 27, 2024 05:35 AM
கார்கில் வெற்றி விழாவிருதுநகர்:விருதுநகர் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளியில் கார்கில் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன், உதவி தலைமை ஆசிரியர்கள், முப்படை அதிகாரிகள் மலர் துாவி மரியாதை செலுத்தினர். முப்படை என்.சி.சி மாணவர்கள் கலந்து கொண்டு மலர் துாவி மரியாதை செலுத்தினர். ஏற்பாடுகளை முப்படை அதிகாரிகள் வைரமணிபாண்டியன், ஜெயபிரகாஷ், பாலாஜி செய்தனர்..................................பேச்சு போட்டிவிருதுநகர்:நோபிள் மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில் ரோட்டரி கிளப் விருதுநகர் கிங்டம் சார்பில் நம்மை நாமறிவோம் என்ற தலைப்பில் பேச்சு போட்டி நடந்தது. ரோட்டரி நிர்வாகி சதீஸ்குமார் தலைமை வகித்தார். கல்லுாரி தலைவர் ஜெரால்டு ஞானரத்தினம் முன்னிலை வகித்தார். எழுத்தாளர்கள், கவிஞர்களான நாநா, கசோரா, பொன் நாகராசன் நடுவர்களாக கலந்து கொண்டனர். கல்லுாரி முதல்வர் வேல்மணி, ஜாகீர் உசேன் வாழ்த்தினர். ஆங்கிலத்துறை மாணவி ஜெபராணி முதல் பரிசும், வரலாற்று துறையை சேர்ந்த கிருஷ்ணவேணி 2ம் பரிசும், வணிகவியல் துறையை சேர்ந்த மைதீன் தாஜில் ஜஸ்ரா மாணவி 3ம் பரிசும் பெற்றனர். ரோட்டரி செயலாளர் ஜெய்லானி நன்றிக்கூறினார்.