உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பேனாவால் குத்தி மூதாட்டி கொலை எஸ்.எஸ்.ஐ., மகன் கைது

பேனாவால் குத்தி மூதாட்டி கொலை எஸ்.எஸ்.ஐ., மகன் கைது

விருதுநகர்:விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டைச் சேர்ந்த வேலம்மாள் 75, வீட்டில் ஜூன் 11 மாலையில் பேனாவால் குத்திக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். இந்த வழக்கில் எஸ்.எஸ்.ஐ., மகன் ஜீவராஜன் 24, கைது செய்யப்பட்டார்.மகள் லதா வீடு அருகே வேலம்மாள் வசித்து வந்தார். அவருக்கு ஜூன் 11 மதியம் லதா உணவு கொடுத்து விட்டு சென்றார். அதன் பின் மாலை 4:00 மணிக்கு லதா சென்று பார்த்த போது வேலம்மாள் கண், கழுத்து, மார்பு, வயிற்று பகுதிகளில் பால்பாய்ண்ட் பேனாவால் குத்திக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.கிழக்கு போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்ததில் சிவப்பு சட்டை, ஊதா நிற பேன்ட், கருப்பு கலர் பேக் அணிந்த வாலிபர் சந்தேகிக்கும் படி சுற்றித்திரிந்ததை கண்டறிந்தனர்.இது தொடர்பான விசாரணையில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த போலீஸ் எஸ்.எஸ்.ஐ., யோக முருகன் மகன் ஜீவராஜன் 24, மூதாட்டியை கொலை செய்ததை கண்டறிந்து கைது செய்தனர்.போலீசார் கூறுகையில், ஜீவராஜன் மது குடித்து விட்டு போதையில் இருந்துள்ளார். மூதாட்டி தனியாக வசிப்பதை நோட்டுமிட்டு, அவரிடம் தவறாக நடக்க முயற்சித்த போது சத்தம் போட்டதால் மாட்டிக் கொள்வோம் என்ற எண்ணத்தில் பேனாவால் குத்திக் கொலை செய்துள்ளார், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ