உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / துப்பாக்கி சுடும் போட்டி 4 பதக்கங்களை வென்ற மாணவி

துப்பாக்கி சுடும் போட்டி 4 பதக்கங்களை வென்ற மாணவி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரி மாணவி மாநில அளவில் துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்களை வென்று உள்ளார்.அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரியில் 3ம் ஆண்டு வணிகவியல் படிக்கும் மாணவி சுவேதா என்.சி.சி., சார்பாக கோயம்புத்தூரில் நடந்த துப்பாக்கி சூடும் போட்டியில் கலந்து கொண்டார். இதில் மாநில அளவில் 4 தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்து உள்ளார்.வெற்றி பெற்ற மாணவியை அருப்புக் கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர், கல்லூரி தலைவர் மயில்ராஜன், செயலர் சங்கரசேகரன், உதவிச் செயலர் தங்கக்குமார், முதல்வர் செல்லத்தாய், என்.சி.சி., ஒருங்கிணைப்பாளர் பாக்கியராஜீ, பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை