மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
16 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
16 hour(s) ago
சிவகாசி:விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளத்தில், மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரை உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், பெண்ணின் தலைப்பகுதி என, 1,500க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில், காளையின் உருவம் செதுக்கப்பட்ட சூதுபவள மணி கண்டெடுக்கப்பட்டது.இதுகுறித்து, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:விஜய கரிசல்குளம் அகழாய்வில் கார்னீலியன் என்றழைக்கப்படும் சூதுபவள கல்மணியில், குழிவான முறையில் செதுக்கப்பட்ட திமிலுள்ள காளை கண்டறியப்பட்டுள்ளது. இது, மோதிரத்தில் பதிக்கும் வகையில் உள்ளது. செதுக்கு முறையில், சீறும் திமிலுள்ள காளை உருவம் கிடைக்கப் பெற்றுள்ளது இதுவே முதல் முறை.இதுவரையில் சுடுமண்ணால் ஆன திமில் உள்ள காளைகள் கிடைத்த நிலையில், தற்போது சூதுபவள கல்லில் திமிலுள்ள காளை உருவம் பொறிக்கப்பட்டது கிடைத்திருப்பது சிறப்பு.கீழடி, சேரர் துறைமுக நகரமான முசிறி பட்டணம் அகழாய்வுகளில் சூதுபவள கல்மணியில் விலங்கின உருவம் பொறிக்கப்பட்ட பதக்கங்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
16 hour(s) ago
16 hour(s) ago