உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தென்காசி தொகுதியில் இறுதி கட்ட பிரசாரம்

தென்காசி தொகுதியில் இறுதி கட்ட பிரசாரம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: தென்காசி தனி லோக்சபா தொகுதியில் பா.ஜ., கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் , தி.மு.க., சார்பில் ராணி, அ.தி.மு.க., கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, நாம் தமிழர் கட்சி தலைவர் இசை மதிவாணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் ஸ்ரீவில்லிபுத்துாரில் பேசியதாவது;50 ஆண்டுகளாக காங்கிரஸ் உடன் கைகோர்த்து இருந்த தி.மு.க. தொகுதி வளர்ச்சிக்கு ஏதாவது செய்தது உண்டா. பிரதமர் வேட்பாளர் யார் என தி.மு.க.வினருக்கு சொல்ல தெரியவில்லை. அ.தி.மு.க.வினரும் பாரத பிரதமர் யார் என்று சொல்ல முடியவில்லை. பிரதமர் யார் என்பது தெரியாமல் ஓட்டுகளை சிதறவிட்டால் தென்காசி தொகுதி எப்படி மேம்படும்.நான் வெற்றி பெற்றால் பிரதமர் மோடியிடம் நேரடியாக சென்று கோரிக்கைகளை நிறைவேற்ற சொல்லி தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடுவேன். மோடி எனது இனிய நண்பர். நாங்கள் எதை வேண்டுமானாலும் கேட்டுப் பெற முடியும். தி.மு.க.,வோ, அ.தி.மு.க.,வோ ஜெயித்தால் என்ன கேட்க முடியும். என்னை வெற்றி பெறச் செய்தால் தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என உறுதி அளிக்கிறேன் என்றார்.* ராஜபாளையத்தில் தி.மு.க.,வேட்பாளர் ராணி பிரசாரத்தில் பேசியதாவது: ஜி.எஸ்.டி வரியால் விவசாயிகள் வியாபாரிகள் நெசவாளர்கள் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.அத்தியாவசிய பொருள்கள் உள்ளிட்ட எல்லா பொருள்களுக்கும் ஜி.எஸ்.டி., வசூலிக்கின்றனர். எல்லா தொழில்களும் இதனால் நலிவடைந்துள்ளன.நம்மிடம் ஜி.எஸ்.டி., ஒரு ரூபாய் வாங்கி 29 பைசா தான் கொடுக்கின்றனர்.பா.ஜ., ஆளும் மாநிலங்களான பீகாரில் 7 ரூபாயும், உ.பி.,யில் 3, குஜராத் மாநிலத்தில் 2 ரூபாய் கொடுக்கின்றனர். தமிழக மக்களே தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றனர்.பெண்களுக்கு உரிமை தொகை, கட்டணம் இல்லா பேருந்து, மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, நீட் தேர்வு ரத்து, கேஸ் சிலிண்டர் 500 ரூபாயாக குறைப்பு, மகளிர் குழு கடன் 10 லட்சம் ரூபாயாக உயர்வு என திட்டங்களை தீட்டி உள்ளார்.இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் மோடி அரசை வீழ்த்தி இண்டியா கூட்டணி வென்றால் மட்டும் நிறைவேற்ற முடியும்., என்றார்.* ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமி பேசுகையில், கடந்த ஐந்தாண்டு காலம் இத்தொகுதியில் வெற்றி பெற்று சென்ற தி.மு.க.,வை சேர்ந்த வேட்பாளர் எந்த நன்மையும் செய்து தரவில்லை. தொகுதிக்கு ஒரு வளர்ச்சியும் கொண்டுவரவில்லை. பெண்கள் தாய்மார்கள் வேலை வாய்ப்புகளின்றி உள்ளனர்.தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தரவும், விலைவாசியை கட்டுப்படுத்தவும் இது போன்ற நன்மைகளை செய்ய வேண்டும் எனில் நாடாளுமன்றத்தில் வலுவாக குரல் கொடுத்தால் மட்டுமே செய்ய முடியும்.,இவ்வாறு அவர் பேசினார்.ஸ்ரீவில்லிபுத்துாரில் அவர் பேசுகையில், கடந்த 50 ஆண்டு காலங்களில் என்ன நடந்திருந்தாலும் பரவாயில்லை. வரும் தேர்தலில் என்னை வெற்றி பெற செய்யும் பட்சத்தில் இதுவரை இருந்த குறைகள், தேக்கங்கள் சரி செய்யப்படும்.ஒவ்வொரு கிராமங்கள் முதல் பேரூராட்சி, நகராட்சி என அனைத்து பகுதிகளிலும், மக்களின் அனைத்து குறைகளையும் சரி செய்யும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வருவேன், -என பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை