உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இடிந்து விழும் நிலையில் மருத்துவமனை சுற்றுச்சுவர்

இடிந்து விழும் நிலையில் மருத்துவமனை சுற்றுச்சுவர்

காரியாபட்டி : காரியாபட்டி அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளதால் சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.காரியாபட்டி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு நலன் கருதி 10 ஆண்டுகளுக்கு முன் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது. நாளடைவில் சிமென்ட் கலவை உதிர்ந்து, செங்கல் வெளியில் தெரிந்து சேதம் அடைந்து வருகிறது. பலத்த காற்றுக்கு இடிந்து விழும் ஆபத்து உள்ளது. சுற்றுச்சுவர் பாதிப்படைந்தால் இரவு நேரங்களில் மருத்துவமனையில் பணிபுரியும் நர்சுகள், நோயாளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். அறியாமையில் அந்த வழியாக செல்பவர்கள் சுற்றுச்சுவர் மீது சாய்ந்து நின்றாலே கீழே விழும் ஆபத்து உள்ளது.அப்பகுதியில் பள்ளத்துப்பட்டி, ஓம் சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமானோர் வந்து செல்வர். நடந்து செல்பவர்கள் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அங்கு பணிபுரியும் நர்சுகள், நோயாளிகளின் நலன் கருதி சேதம் அடைந்த சுற்றுச்சுவரை சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை