உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வத்திராயிருப்பு பேரூராட்சி சஸ்பெண்ட் ஊழியர் தற்கொலை

வத்திராயிருப்பு பேரூராட்சி சஸ்பெண்ட் ஊழியர் தற்கொலை

வத்திராயிருப்பு : சஸ்பெண்ட் செய்யப்பட்ட வத்திராயிருப்பில் பேரூராட்சி ஊழியர் சங்கர குருமூர்த்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.வத்திராயிருப்பை சேர்ந்தவர் சங்கர குருமூர்த்தி,54, இவர் வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். 2022-ல் பணியின்போது ஒழுங்கீனமாக இருந்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சஸ்பெண்டை ரத்து செய்யவும், மீண்டும் பணி வழங்கவும் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.இந்நிலையில் மாதாந்திர பிழைப்பு ஊதியம் மட்டுமே பெற்று வந்த நிலையில், கடந்த 10 மாதங்களாக அதுவும் வழங்கப்படவில்லை. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த அவர் வீட்டில் நேற்று காலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வத்திராயிருப்பு போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை