உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வேப்பங்கொட்டை சீசன் விருதுநகரில் துவக்கம்  கிலோ ரூ.50க்கு விற்பனை

வேப்பங்கொட்டை சீசன் விருதுநகரில் துவக்கம்  கிலோ ரூ.50க்கு விற்பனை

விருதுநகர்: விருதுநகரில் ஆனி, ஆடி, ஆவணி மாதம் வேப்ப மரங்களில் வேப்பங்கொட்டை உற்பத்தி ஆகும். தற்போது கிலோ ரூ.50க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.மாவட்டத்தில் ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் வேப்பங்கொட்டை சேகரிப்பு அதிகமாக நடக்கும். இம்மாதங்களில் வீதிகளில், உட்புற தெருக்களில் குவிந்து கிடக்கும் வேப்பம் கொட்டை, பழம், விதைகளை சேகரித்து கமிஷன் கடைகளில் கொடுப்பர். இவை வேப்பங்கொட்டையில் உள்ள அசாத்தின் எனும் மருத்துவ குணம் கொண்ட வேதி பொருள் பிரித்தெடுக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மிஞ்சுபவை மூணார், தேனி உள்ளிட்ட பகுதிகளில் விளையும் ஏலக்காய் தோட்டங்களுக்கு நாட்டு உர தயாரிப்புக்காக அனுப்பப்படுகிறது. இந்தாண்டு ஆனி மாதம் துவங்கியுள்ள நிலையில் முதியவர்கள், இளைஞர்கள், கிராமத்தினர் வேப்ப மரங்களில் காய்த்து வரும் வேப்பங்கொட்டைகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 2021ல் ரூ.80க்கும், 2022ல் ரூ.100 வரையும், 2023ல் கிலோ ரூ.145 வரை வேப்பங்கொட்டை கொள்முதல் செய்யப்பட்டது. இப்போது சீசன் துவக்கம் என்பதால் கொட்டை கிலோ ரூ.50க்கும், வேப்பம் பழம் கிலோ ரூ.25க்கு விற்கப்படுகிறது. ஆடி மாதத்தில் நுாறை தாண்டும். நாட்டு உர தயாரிப்பு, இயற்கை விவசாயம், வேப்பெண்ணெய்யின் மருத்துவக்குணம் போன்ற காரணங்களால் வேப்பங்கொட்டைக்கு தனி மவுசு அதிகரித்துள்ளது.ஜூன் முதல் செப்டம்பர் வரை நடக்கும் இந்த சேகரிப்பு பணிகள் நடக்கும். இது கிராமப்புறத்தில் உள்ள வருவாய் இல்லாத முதியவர்களுக்கு பெரும் வருவாய் ஈட்ட உதவுகிறது. இதனால் வாழ்வாதாரத்திற்கு வழி கிடைக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ