உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆட்டுப்பண்ணையில் 44 ஆடுகள் ஏலம்

ஆட்டுப்பண்ணையில் 44 ஆடுகள் ஏலம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட சாத்துார் ஆட்டுப்பண்ணையில் பராமரிக்கப்பட்ட வெம்பூர் செம்மறி ஆடுகள் 24, கன்னி வெள்ளாடுகள் 20 என மொத்தம் 44 ஆடுகள் ஜன. 30 காலை 11:00 மணிக்கு சாத்துார் ஆட்டுப்பண்ணையில் வைத்து புத்தக மதிப்புத்தொகை அடிப்படையில் ஏலம் விடப்படுகிறது.இதற்கான ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவர்கள் முன் தொகையாக ரூ. 5 ஆயிரம் வரைவோலையாக வங்கி மூலம் பெற்று ஜன. 30 காலை 10:30 மணிக்குள் சாத்துார் ஆட்டுப்பண்ணை துணை இயக்குநர் அலுவலத்தில் சமர்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு சாத்துார் ஆட்டுப்பண்ணை துணை இயக்குநர் அலுவலகத்திற்கு நேரிலோ, 73057 08658 என்ற அலைபேசி எண்ணிற்கு அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ