உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  நாய்கள் கடித்ததில் 7 பேர் காயம்

 நாய்கள் கடித்ததில் 7 பேர் காயம்

காரியாபட்டி: காரியாபட்டி அருகே நேற்று இரவு கழுவனச்சேரி, எஸ்.தோப்பூரில் விளையாடிக் கொண்டிருந்த நிஷாந்த் 12, ரிதன் 12, மாரிமுத்து 55 , முத்துமாரி 17, கழுவனச்சேரி பச்சையம்மாள் 40, வீரணன் 26, சின்னகருப்பன் 26, ஆகியோரை கடித்தது. விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சில தினங்களுக்கு முன் ஆவியூரில் 15க்கும் மேற்பட்டோரை கடித்தது. தெருநாய்கள் அப்புறப்படுத்தப்பட்டன. தொடர்ந்து நாய்கள் கடித்த சம்பவம் வருவதால், தெரு நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். காரியாபட்டியில் ஒரு மாதத்தில் 200க்கும் மேற்பட்டோரை தெரு நாய் கடித்து ரேபிஸ் தடுப்பூசி போட்டுள்ளது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ