உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஈரோடுக்கு கூடுதல் பஸ் வசதி

ஈரோடுக்கு கூடுதல் பஸ் வசதி

ஸ்ரீவில்லிபுத்தூர்: ராஜபாளையத்தில் இருந்து ஈரோட்டிற்கு தினமும் 2 பஸ்கள் இயங்கி வந்த நிலையில் தற்போது கூடுதலாக ஒரு பஸ் இயக்கப்பட்டுள்ளது.இதன்படி ராஜபாளையம் டிப்போவில் இருந்து தினமும் மதியம் 12:15, இரவு 9:00 மணிக்கு புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர், திருமங்கலம், மதுரை, திண்டுக்கல், கரூர் வழியாக ஈரோட்டிற்கு 2 பஸ்கள் இயங்கி வருகிறது.தற்போது ஈரோடு டிப்போவிலில் இருந்து தினமும் இரவு 7: 45 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 3:00 மணிக்கு ராஜபாளையம் வந்தடைகிறது. மறு மார்க்கத்தில் தினமும் காலை 7:45 மணிக்கு ராஜபாளையத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 3:00 மணிக்கு ஈரோடு சென்றடைகிறது.கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டுள்ளதால் ராஜபாளையம், தளவாய்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜவுளி, நெசவு, விசைத்தறி, கார்மெண்ட்ஸ் நிறுவன உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ