உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நுாறு சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.லோக்சபா தேர்தல் அறிவிப்பை முன்னிட்டு வாக்காளர் அனைவரும் வாக்களிப்பதை வலியுறுத்தும் பொருட்டு ராஜபாளையம் மதுரை ரோட்டில் நடந்த பேரணியை கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து துவக்கினார்.துணை கலெக்டர் பிரேம்குமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அனிதா, முதல் தலைமுறை வாக்காளர்களான கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசக பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.ஊர்வலம் பழைய பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை ரவுண்டானா, கலை மன்றம் வழியே ஜவகர் மைதானம் சென்றடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ