| ADDED : டிச 25, 2025 06:09 AM
விருதுநகர்விருதுநகர் வின்ரோஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில், தி.மு.க.,வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடந்தது. அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். விருதுநகர் எம்.எல்.ஏ., சீனிவாசன், மாநில விளையாட்டு அணி துணை செயலாளர்கள் கவுதமன், மனோகரன், நிவேதா ஜெசிகா, குமார், நகராட்சி தலைவர் மாதவன், நகர செயலாளர் தனபாலன், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பாராஜ் ஆகியோர் பங்கேற்று வீரர்களுக்கு பரிசு வழங்கினர். கட்சி நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராஜகுரு செய்திருந்தார்.