உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டாஸ்மாக்கை மூட வழக்கு

டாஸ்மாக்கை மூட வழக்கு

மதுரை: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே இலந்தைகுளம் பார்த்திபன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:இலந்தைகுளம்-கோட்டையூர் ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. மது அருந்துவோர் பாட்டில்களை உடைத்து அருகிலுள்ள விவசாய நிலத்தில் எறிகின்றனர். அவை விவசாயிகளின் கால்களில் காயம் ஏற்படுத்துகின்றன. அருகே பள்ளி, கோயில்கள் உள்ளன. டாஸ்மாக் கடையை அகற்ற இலந்தைகுளம் ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கலெக்டருக்கு மனு அனுப்பினோம். கடையை மூட உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு: கலெக்டர் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை