உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேதமான மேல்நிலைத்தொட்டி: உயிர் பயத்தில் மக்கள்

சேதமான மேல்நிலைத்தொட்டி: உயிர் பயத்தில் மக்கள்

சாத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் சேதமடைந்த மேல்நிலைத் குடிநீர் தொட்டிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க போர்வெல் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு மேல்நிலை தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இதில் பத்தாயிரம் லிட்டர் முதல் முதல் 30 ஆயிரம் லிட்டர் வரையிலான மேல்நிலை குடிநீர் தொட்டிகள் உள்ளன. இவை கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் மேல்நிலைத் தொட்டிகளின் தூண்கள் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது.மேலும் தொட்டிகளின் மேற்பரப்பிலும் அடிப்பரப்பிலும் பக்கவாட்டு சுவரிலும் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றன. மேலே செல்ல அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகள் சேதமடைந்து இடிந்து போன நிலையில் உள்ளன.இதனால் தொட்டியில் ஏறி சுத்தம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக மேல்நிலைத் தொட்டியில் இருந்து விநியோகமாகும் குடிநீர் கலங்கலாகவும், புழுக்கள் நெளிந்து சுகாதாரம் இன்றியும் கலங்கலாகவும் உள்ளது. சாத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் சிந்தப்பள்ளி, மேட்டமலை, உப்பத்துார், ஒத்தையால், கண்மாய் சூரங்குடி, வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் ஏழாயிரம் பண்ணை, புலிப்பாறை பட்டி தாயில்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் சேதம் அடைந்த நிலையில் மேல்நிலைத் தொட்டிகள் பல உள்ளன. ரோட்டில் ஓரத்தில் உள்ள மேல்நிலைத் தொட்டிகள் கனரக வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் அதிர்வின் காரணமாக அதன் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து விடுகின்றன.ஊராட்சி தலைவர்கள் போதுமான நிதி வசதி இல்லை எனக் கூறி மேல்நிலைத் தொட்டிகளில் பராமரிப்பு பணிகள் கூட செய்யாமல் விட்டு விடுகின்றனர் இதனால் பழுதான மேல்நிலை தொட்டிகள் எப்போது விழும் என்றற அச்சத்துடன் மக்கள் கடக்க வேண்டியதுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் விபத்துக்கள் ஏற்படும் முன் சேதம் அடைந்த மேல்நிலைத் தொட்டிகளை அப்புறப்படுத்திவிட்டு புதிய மேல்நிலைத் தொட்டிகளை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை