உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  இறந்தவரின் கண் அரசு மருத்துவமனைக்கு தானம்

 இறந்தவரின் கண் அரசு மருத்துவமனைக்கு தானம்

விருதுநகர்: விருதுநகர் ஆத்துமேடு சேர்ந்த ராமகிருஷ்ணன் 43, நவ.16ல் இறந்தார். இவரின் இரு கண்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. விருதுநகர் சிவந்திபுரம் ஆத்துமேடு சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் நவ.16ல் வீட்டில் மதியம் 3:50 மணிக்கு இறந்தார். இவரின் உடல் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.இறந்த ஆறு மணி நேரத்திற்குள் கண்தானம் செய்ய முடியும் என்பதால் உறவினர்கள் சம்மதத்துடன் ராமகிருஷ்ணனின் இரு கண்களும் டீன் ஜெயசிங் தலைமையிலான மருத்துவ குழுவினரால் இரவு 8:10 மணிக்கு தானமாக பெறப்பட்டது. இந்த கண்கள் தற்போது மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் கண்தானம் வங்கியில் வைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவைப்படும் போது உடனடியாக பயன்படுத்தப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை