உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நிழற்குடை இல்லாததால் சிரமம்

நிழற்குடை இல்லாததால் சிரமம்

விருதுநகர் : விருதுநகர் அருகே ரோசல்பட்டி ஊராட்சியில் காரியப்பட்டி, மல்லாங்கிணர் செல்ல பஸ்சிற்கு காத்திருக்கும் மக்கள் அமர நிழற்குடை இல்லாததால் அவதிப்படுகின்றனர்.விருதுநகர் அருகே ரோசல்பட்டி பகுதியில் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதி வழியாக அரசு, தனியார் பஸ்கள் மல்லாங்கிணர், காரியப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதால் மக்களின் போக்குவரத்து தேவை நிறைவேறுகிறது.ஆனால் இப்பகுதிகளுக்கு செல்வற்கு காத்திருக்கும் பயணிகள் அமர சரியான நிழற்குடை இல்லை. மேலும் இரண்டு சிமெண்ட் இருக்கைகள் அமைத்தனர். அதில் ஒன்று சேதமடைந்து விட்டது.மற்றொன்றில் தரை தளத்தின் கான்கீரிட் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.நிழற்குடை இல்லாதாதால் மழை, வெயில் காலங்களில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே கான்கீரிட் சிலாப்களை அகற்றிவிட்டு புதிய நிழற்குடை அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை