உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  நாய்களால் 10 நாளில் 22 ஆடுகள் பலி இழப்பீடு வழங்க வளர்ப்போர் எதிர்பார்ப்பு

 நாய்களால் 10 நாளில் 22 ஆடுகள் பலி இழப்பீடு வழங்க வளர்ப்போர் எதிர்பார்ப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே ஜமீன்கொல்லங் கொண்டானில் 10 நாளில் 22 ஆடுகள் நாய்களின் வேட்டைக்கு பலியானதால் ஆடு வளர்ப்போர் கடும் மனவேதனைக்குள்ளாகி வருகின்றனர். அரசு நாய்களை கட்டுப்படுத்தவும் இழப்பீடு வழங்கவும் எதிர்பார்க்கின்றனர். ஜமீன் கொல்லங் கொண்டான் பஸ் ஸ்டாப் அருகே புது குடியிருப்பு பகுதியில் 40 பேர் ஆடு வளர்ப்பை முழு தொழிலிலாக ஈடுபட்டுள்ளனர். பகலில் மேய்ச்சலுக்கு விட்டு இரவில் தொழுவத்தில் பாதுகாப்பாக அடைத்து வைப்பர். 10 நாட்களுக்கு முன் பாண்டியராஜ் தொழுவத்தில் புகுந்த நாய்கள் கடித்து இரண்டு ஆடுகள் உயிரிழந்தது. நேற்று முன்தினம் பாண்டி என்பவரது தொழுவத்தில் புகுந்த நாய்கள் கடித்து 13 ஆடுகள் உயிரிழந்தன. இந்நிலையில் நேற்று கந்தசாமி, பாண்டி ஆகியோரது தொழுவத்தில் இருந்த நான்கு ஆடுகளை கடித்த நாய்கள் ஆட்டு குட்டியை துாக்கிச் சென்றது. 3 ஆடுகள் உயிரிழந்த நிலையில் ஒரு ஆட்டிற்கு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்து வருகிறார். கடந்த 10 நாட்களில் நாய்கள் கடித்து 22 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆடு வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை